(திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு)
விதிவசத்தால் சோதனை மேல் சோதனைகளை எதிர்கொள்ளும் இளம்பெண்ணின் தாமரையின் கதையே, ‘பட்டுச்சேலை’ தொடர். புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘பட்டுச்சேலை’ தொடர், வரும் வாரத்தில் இருந்து மேலும் சூடு பிடிக்கிறது.
காஞ்சனாவின் கடையில் பட்டுச்சேலை வாங்கி, கிராமத்தில் விற்பனை செய்பவள் தாமரை. காஞ்சனாவின் மகனை காதலித்தாலும், சந்தர்ப்பவசத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட அருணை திருமணம் செய்யவேண்டிய கட்டாயத்துக்கு தாமரை ஆளாகிறாள். காஞ்சனாவின் மகனை திருமணம் செய்துகொண்ட வீணாவும், அவளது அம்மாவும் சேர்ந்துகொண்டு தாமரையையும் அவளது கணவனையும் தினம்தினம் கொடுமைப்படுத்துகிறார்கள்.
காஞ்சனாவின் கடையில் இருந்து புடவை வாங்கமுடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறாள் தாமரை. இந்த நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் தாமரையின் கணவன் அருண் கடத்தப்படுகிறான்.
அருணை கொலைசெய்து, அந்த பழியை தாமரையின் மீது சுமத்த ஒரு கும்பல் திட்டமிடுகிறது. யார் அவர்கள்? அவர்களின் திட்டத்தை தாமரையால் முறியடிக்க முடியுமா? என்பது போன்ற கிடுகிடு திருப்பங்களுடன் பயணிக்கிறது பட்டுச்சேலை தொடர்.
தாமரையாக ஷாதிகா, காஞ்சனாவாக பிரபல நடிகை மீனாகுமாரி, அஜய்யாக ரிச்சர்ட் நடிக்க, இவர்களுடன் மேலும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத, ‘பட்டுச்சேலை’ குடும்பத்தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கும், மறுநாள் மதியம் 1:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.