தி லக்ஷ்மிநாராயணா குளோபல் மியூசிக் பெஸ்டிவல்
(ஞாயிறு தோறும் மாலை 6.00 மணிக்கு)
தி லக்ஷ்மிநாராயணா குளோபல் மியூசிக் பெஸ்டிவல் - இதனை 1992 ஆம் வருடம் மறைந்த தனது குரு மற்றும் தந்தையான பேராசிரியர் வி. லக்ஷ்மிநாராயணா அவர்களின் நினைவாக டாக்டர் எல். சுப்ரமணியம், விஜி சுப்ரமணியம் அவர்களுடன் சேர்ந்து நிறுவினார். எல் ஜி எம் எப் துவங்க பட்டதில் இருந்து உலகெங்கும் உள்ள பல பிரபல கலைஞர்கள் உதாரணமாக யெஹுடி மெனுஹின், எம். எஸ். சுப்பலக்ஷ்மி, பிஸ்மில்லாஹ் கான், அல் ஜெர்ரியு, ஸ்டான்லி கிளார்கே, ஜார்ஜ் டுக்கே மற்றும் ஜீன்- லுக் பொன்டி போன்றவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர்.
2010 ஆம் வருடம் கவிதா கிருஷ்ணமுர்த்தி மற்றும் சுப்ரமணியம் கலை இயக்குனர் ஆக பதவியேற்றனர். இந்த இசை விழா மட்டுமே உலகெங்கும் உள்ள கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிபடுத்தவும் பல விதமான இசை வடிவங்களை அரங்கேற்றும் மேடையாக அமைந்தது.
இது இந்திய பாரம்பரிய இசை ( கர்நாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி) ஜாஸ் ராக் மேல்நாட்டு பாரம்பரிய இசை ஆர்செஸ்ட்ரல் இந்திய கிராமிய இசை கசல்ஸ் ஹிந்தி திரைப்பட இசை அத்துடன் வெவ்வேறு ஐந்து கண்டங்களை சேர்ந்த பலவிதமான பாரம்பரிய இசை மற்றும் கிராமிய இசை இதில் இடம் பெற்றன. இன்று வரை இத் திருவிழா 22 நாடுகளில் 55 நகரங்களில் நடந்துள்ளது இதன் ஒவ்வொரு நிகழ்விலும் சுமார் 200000 மக்கள் பார்வையாளர்களாக இருந்து இருக்கின்றனர். சின்ன திரை உலகில் முதன் முறையாக ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் பிரத்தியேகமாக ஒரு தொடராக இது ஞாயிறு தோறும் மாலை 6.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.