(வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 6.00)
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு அறிவியல் தகவல்கள் அடங்கிய ”வியப்பூட்டும் விஞ்ஞானம்” என்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
30 நிமிடங்கள் அடங்கிய இந்த நிகழ்ச்சியில் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்வுகள், செய்திகள் அடங்கிய பல தொகுப்புகளை அழகான காட்சிகளோடு தொகுத்து வழங்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியினை தயாரிப்பாளர் சோனியாவுடன் அர்ச்சனாவும் சேர்ந்து தயாரிக்கின்றனர். ஷர்மிளா இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார், அது மட்டுமின்றி க்ரிஸ்டி, பார்க்கவி ஆகியோர் அப்டின்னா மற்றும் ஹேஷ் டேக் விஞ்ஞானம் என்ற பகுதிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு கேமராவுமன். தமிழகத்திலேயே நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் தான் பெண் கேமரா வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஒருவர் தன்யா மற்றொருவர் ப்ரீத்தி.
வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சியை பொருத்த அளவில் அனைத்து வாரமும் GFX SETல் படமாக்கப்படுகிறது. இதனை வாரம் தோறும் படம்பிடித்து தருபவர் தன்யா தான்.
வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சியில் பகுதிகள் இருக்கின்றன, அதில் அப்டீன்னா பகுதியில் நம்மை சுற்றி இருக்கும் அறிவியலை சிறு சிறு சோதனைகள் மூலம் செய்து காட்டுகிறார் கிரிஸ்டி.
அடுத்ததாக ஹேஷ் டேக் விஞ்ஞானம், இந்த பகுதியினை சமூக வலைதள செய்தியாளர் பார்க்கவி வழ்ங்கி வருகிறார். சமூகவலைதளங்கள் இப்போதைய காலக்கட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகவே தவிர்க்க முடியாத சமூகவலைதள செய்திகளை குறிப்பாக அறிவியல் சார்ந்த்த செய்திகள், கமெண்ட்கள் குறித்து சுவாரஸ்யமான வகையில் பார்க்கவி வழங்குகின்றார்.
வாரம் ஒரு விஞ்ஞானி பகுதியில் வாரா வாரம் ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக செய்தி தொகுப்பாக வழங்குகின்றனர்.
இந்நிகழ்ச்சி குறித்து தயாரிப்பாளர் சோனியாவிடம் கேட்டபோது, தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து வடிவமைக்கப்பட்ட ஒரே நிகழ்ச்சு வியப்பூட்டும் விஞ்ஞானம் தான். அந்த வகையில் இந்நிகழ்ச்சியினை தயாரிப்பதில் பெருமையாக உள்ளது. மேலும் பள்ளி கல்லூரியில் படித்ததை விட இந்நிகழ்ச்சிக்காக அதிகம் படிக்க வேண்டியுள்ளது. அப்போது தான் நேயர்களுக்கு உண்மையான தகவல்களை நேர்மையோடு எங்களால் அளிக்கவும் முடியும் என்று பெருமிதத்துடன் கூறினார்.
அர்ச்சனாவிடம் கேட்டபோது, வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சியை பொருத்தவரை நாசா, ஈசா துவங்கி சென்னை ஐஐடி, அண்ணாபல்கலைக்கழகம் வரை மேற்கொள்ளும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நிகழ்வுகளை நாங்கள் கவனித்து தொகுத்து வழங்குகிறோம். அதுமட்டுமின்றி தனி நபர் மேற்கொள்ளும் கண்டுபிடிப்புகளை பற்றியும் நாங்கள் வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சியில் இடம் பெறும் வண்ணம் எங்களால் ஆன முயற்சிகளை எடுத்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.
வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சி குறித்து நேயர்கள் பலர் தங்களுடைய கெருத்துக்களையும் பகிர்ந்துக்கொண்டு இவர்களோடு உரையாட முடியும். உங்களுக்கு இந்நிகழ்ச்சி குறித்து ஏதேனும் கருத்துக்களோ விமர்கனங்களோ இருந்தால் SCIENCETECH@NS7.TVஎன்ற மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துக்கொள்ளலாம். இந்நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சி சார்ந்த கேள்வி கேட்கப்ப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. நீங்களும் பகிர்ந்துக்கொண்டு பரிசுகளை வெல்லுங்கள்.