பியாங்யாங்:ஐ.நா தீர்மானத்தை மீறி வட கொரியா தொடர்ச்சியான அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
இதற்காக வட கொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன. இதன் மூலம் அமெரிக்கா- வட கொரியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வட கொரியாவின் மூத்த அதிகாரி ஒருவர் அந்நாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:
"வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மனோபாவம் தொடர்கிற வரை எங்களது அணு ஆயுத சோதனையும் தொடரும்",
என்று அவர் கூறியுள்ளார்.