வாஷிங்டன்: ஐ.நா மற்றும் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி வட கொரியா தொடர்ச்சியான அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில்:
வட கொரியாவுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதே எனது நோக்கம், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதென்பது மிகவும் அரிதான நிகழ்வாக உள்ளது, இதனால் வட கொரியாவுடனான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதன்மூலம் வட கொரியாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், வட கொரிய விவகாரத்தில் உரிய முடிவெடுப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.