சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி. சண்முகம், வைத்தியலிங்கம் ஆகியோர் நேற்று இரவு முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தனர், பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார் பேசியபோது:
அ.தி.மு.க கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்றும், சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த தினகரனை கட்சியை விட்டு நீக்கி கட்சியையும், ஆட்சியையும் ஒழுங்காக நடத்துவதே அனைவரது விருப்பமாக உள்ளது என்று ஜெயகுமார் கூறினார். மேலும், பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் அணியை சேர்ந்தவர்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஓற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் ஜெயகுமார் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜெயகுமார், இனிமேல் சசிகலா மற்றும் தினகரனின் தலையீடு கட்சியில் இருக்காது என்றும் தெரிவித்தார்.