சென்னை:சென்னையில் அனைத்து காவலர்களும் இன்று காலை 6 மணிக்கு பணிக்கு வர உத்திரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்த அ.தி.மு.க அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி சண்முகம், வைத்தியலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்போது ஜெயகுமார் கூறும்போது " அ.தி.மு.க கட்சியில் ஒரு குடும்பத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்பது தான் கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் விருப்பமாக உள்ளது, எனவே சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சார்ந்த தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்நிலையில், தமிழக அரசியலில் அசாதாரண சுழல் நிலவுவதாக கூறி சென்னையில் உள்ள அனைத்து காவலர்களை காலை 6 மணிக்கு பணிக்கு வர, சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.