சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நேற்று முதலமைச்சர் பழனிசாமி உடனான சந்திப்பிற்கு பிறகு நிருபர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் கட்சியின் எதிர்காலம் குறித்தும், ஆட்சியை தொடர்ந்து நடத்துவது குறித்தும் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தினோம்.
அதில், சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த தினகரனை கட்சியில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைத்து விட்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்துவதே அனைத்து தொண்டர்களின் விருப்பம் என்று கூறினார், மேலும் சசிகலா, மற்றும் தினகரனின் தலையீடு இனி கட்சியில் இருக்காது என்றும் ஜெயகுமார் கூறினார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.