ராஜஸ்தான்:ராஜஸ்தானில் உள்ள பரத்பூர்-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால் போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக மைனர் பெண்கள் மூன்று பேர் அருகில் உள்ள குளத்தில் குதித்துள்ளனர். மூவரில் இருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். ஒருவரை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் பல பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காவல்துறையினர் பெண்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும். சோதனை செய்ய வந்த காவல்துறையினர் பெண்களை கொடூரமாக தாக்கினர் என்றும், அதனால் தான் பெண்கள் தப்பிச்செல்ல குளத்தில் குதித்தனர் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.