ஆந்திரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு வழங்கப்பட்டு வந்த கிருஷ்ணா நீரை அம்மாநில அரசு நிறுத்தியுள்ளது.
ஆந்திராவில் நிலவிவரும் வறட்சியால் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது, இந்த நெருக்கடியை சமாளிக்கவே, தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்டதாக ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் அனைத்தும் நீரின்றி வறண்டு காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த கிருஷ்ணா நீரும் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.