நியூயார்க்:அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் உள்ள மதுபான விடுதியில் இந்தியாவை சேர்ந்த என்ஜினீயர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்பவர், கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான ஹர்னிஷ் பட்டேல்(43) என்பவர் இங்குள்ள லான்சஸ்டர் பகுதியில் பலசரக்கு கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு கடைக்கு அருகே இருந்த அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். ஹர்னிஷ் பட்டேலின் கடை லங்காஸ்டர் நகரின் ஷெரீப் அலுவலகத்திற்கு மிக அருகில் இருக்கிறது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ஷெரீப் அலுவலக ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கிறார் அப்போது, ஹர்னிஷ் இறந்துகிடப்பதைக் கண்டிருக்கிறார் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இறந்து போன ஹர்னிஷ் பட்டேலுக்கு மனைவி, ஒரு குழந்தையும் உள்ளனர். அமெரிக்க காவல் துறையினர் இந்த படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Image may be NSFW.
Clik here to view.