காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத் தமிழ்த்துறை திருநங்கையர்: சாதித்தவர்களின் வரலாறு என்னும் தலைப்பில் 22/02/2017 அன்று கருத்தரங்கை ஒன்று நடத்தியது. கருத்தரங்கி்ன் தொடக்கவிழாவில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பா. ஜெய்கணேஷ் வரவேற்புரை வழங்க அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் இயக்குநர் முனைவர் இர.பாலசுப்பிரமணியன் தலைமையுரை வழங்கினார்.
விழாத்தலைமையுரையில் கருத்தரங்கின் நோக்கமும் திருநங்கையருக்காக செய்யவேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்ப்பேராய செயலர் முனைவர் கரு.நாகராசன் வாழ்த்துரை வழங்க விஜய் தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இப்படிக்கு ரோஸ் அவர்கள் சிறப்புரை சிறப்பாக வழங்கினார். தோழி பிரியாபாபு அவர்கள் காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் திருநங்கையர் என்னும் தலைப்பில் விரிவான ஆய்வுரை வழங்கினார்.
தொடக்க விழாவைத் தொடர்ந்து நிகழ்பெற்ற அமர்வும் அதில் பிரியா பாபு நிகழ்த்திய உரையும் குறிப்பிடத்தக்கது. நிறைவுவிழாவில் புலத்தின் தலைவர் முனைவர் ஜெ. ஜோதிகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்க தோழி ரேவதி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
அவரின் உரையைத் தொடர்ந்து ரோஸ், பிரியாபாபு மற்றும் ரேவதி அவர்களுடன் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடந்து கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.
சாதித்த திருநங்கைகள் மூவரின் உரையும் மாணவர்களிடையே பெரிய மன எழுச்சியை ஏற்படுத்தியது.
[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/SRM-University-organizes-seminar-on-Successful-Transgenders-24-02-17]