சென்னை:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24) தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, தற்போது சென்னை தியாகராய நகரில் தீபா பேரவை அலுவலகம் என்ற பெயரில் புதிய அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. தனிக்கட்சியின் பெயர், கட்சியின் கொடி உள்ளிட்டவை இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.