பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
சாதாரண சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு முதல் வகுப்பு வேண்டி தனி கோர்ட்டு நீதிபதியிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், வருமான வரி ஆவணங்களை ஒப்படைத்து சிறையில் முதல் வகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி அறிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று சசிகலாவை சந்தித்த அவரது வக்கீல்கள், சசிகலாவுக்கு சிறையில் முதல் வகுப்பு கேட்கும் விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கி சிறைத்துறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அந்த மனுவை பரிசீலித்து 3 நாளில் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Image may be NSFW.
Clik here to view.