சென்னை:சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதன்படி 2003-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இந்த வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதற்கு ஈடாக ரூ.10 கோடி தாருங்கள் என்று தமிழகத்திடம் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.