சென்னை:தமிழக முதலமைச்சராக நேற்று எடப்படி பழனிசாமி பதவியேற்றுள்ளதை அடுத்து, முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தங்கியிருந்த வீட்டை காலி செய்யும் படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் தான் பன்னீர் செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார், நிதி அமைச்சராக இருந்த போது ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த வீடு கொடுக்கப்பட்டது.
இங்கிருந்து பன்னீர் செல்வம் காலி செய்யும் பட்சத்தில் எம்.எல்.ஏக்கள் விடுதியில் அவருக்கு அறை ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.