அதிமுக பொதுச்செயலாளராக ஜனவரி 2ம் தேதி சசிகலா பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி ஏற்பு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தலைமையின்கீழ் அதிமுக செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்து, தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.