தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை கட்டாயமாக வங்கிகள் மூலமாக வழங்க வகை செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, தொழில் - வணிக நிறுவனங்கள் காசோலை மூலமாகவோ அல்லது நேரடியாக தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரையிலான மாத ஊதியத்தை, பணியாளர்களின் அனுமதியின்றி வழங்கிட இந்த அவசரச் சட்டம் வழிவகுக்கிறது.
இந்த மசோதா சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவால் தாக்கல் செய்யப்பட்டது.
கேரளா, ஆந்திர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே ஊதியத்தை காசோலை மற்றும் மின்னணு முறையில் வழங்குவதற்கு விதிகளைக் கொண்டுவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.