சென்னை:உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் குறுஞ்செய்தி மற்றும் புகைப்படங்களை அனுப்பிட வாட்ஸ் அப் வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனம் என்ற பெயரை வாட்ஸ் அப் தக்க வைத்துள்ளது. தனது பயனாளர்களுக்காக ஏற்கனவே வாய்ஸ் கால் வசதியை அறிமுகம் செய்திருந்த வாட்ஸ் அப் தற்போது வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஐபோன், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என மூன்று இயங்குதளங்களில் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். இதற்கு நீங்கள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோர்க்கு சென்று உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
உங்கள் மொபைலில் உள்ள காண்டாக்ட் லிஸ்டிற்கு சென்று நீங்கள் பேச விரும்பும் நபரை தேர்வு செய்தால் வாய்ஸ் கால், வீடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும்.
அதில் நீங்கள் வீடியோ கால் வசதியை தேர்வு செய்தால் நீங்கள் பேச விரும்பும் நபருக்கு வீடியோ கால் இணைக்கப்படும். இந்த வீடியோ கால் வசதியைப் பொறுத்தவரை நீங்கள் பேச விரும்பும் நபரும் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் பேச விரும்பும் நபருக்கு வீடியோ கால் வசதி இணைக்கப்படவில்லை என்றாலோ அல்லது உங்கள் மொபைலில் இந்த வசதி சப்போர்ட் செய்யாது என்று காட்டினாலோ, தயங்காமல் உடனடியாக வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.