சிம்லா:இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் இன்று சுமார் 40 பயணிகளுடன் தனியாருக்கு சொந்தமான ஒரு பஸ், குலு நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.
மலைப்பாங்கான பாதை வழியாக சென்றபோது பின்ட்ராவனி என்ற இடத்தின் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் உள்ள பெரிய பள்ளத்துக்குள் கவிழ்ந்து, உருண்டது.
இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த பலர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Image may be NSFW.
Clik here to view.