(திங்கள் முதல் வியாழன் வரை மாலை 4.30 மணிக்கு)
‘தர்மத்தின் பாதையில்’ என்னும் தலைப்பில் சங்கரா தொலைக்காட்சி ஒரு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஒவ்வொரு வாரமும், திங்கள் முதல் வியாழன் வரை மாலை 4.30 மணியிலிருந்து 5.00 மணி வரை ஒளிபரப்பாகிறது.
தர்மம் என்பதற்குப் பல விளக்கங்கள் இருந்தாலும், பெரியவர்கள் வாழ்ந்து காட்டிய பாதை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இயற்கையின் போக்கையும், படைப்பின் இயக்கத்தையும் கவனித்த நமது முன்னோர்கள், எல்லாமே ஒரு ரீதியில் இயங்குவதை அறிந்தார்கள். அதை மனித வாழ்க்கைக்கு ஏற்ப வகுத்து வாழ்ந்து காட்டினார்கள்; எழுதி வைத்தார்கள்.
ஆக, தர்மம் என்பது ஒரு வாழும் நெறி. அனைவரும் ஆனந்தமாக நடக்கக் கூடிய, நடக்க வேண்டிய பாதை. அதுதான் இந்த வெற்று வாழ்க்கைக்கு அர்த்தமும், ஆழமும், ஏன் இனிமையும் சேர்க்கிறது. அகப்பயணத்திற்கும் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கும்.
இசைக்கவி ரமணன் இந்நிகழ்ச்சியையும் வழங்குகிறார்.