(திங்கள் முதல் வெள்ளி இரவு 9.30 மணிக்கு)
வேந்தர் டிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது “மூன்றாவது கண்”. அமானுஷ்யங்களைப் பற்றின ஒரு பரப்பரப்பான தேடல்தான் இந்த நிகழ்ச்சி.
அமானுஷ்ய உலகில் இதுவரை மறைந்திருந்த பல பயங்கர சடங்குகளையும் நம்பவே முடியாத ஆச்சரியங்களையும் மூன்றாவது கண் நிகழ்ச்சி வெளியுலகின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறது. பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவோடு 500 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் தற்போது, புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
வரும் வாரம் முதல் தமிழகத்தைத்தாண்டி பல மாநிலங்களில் இருக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் தொடராக மூன்றாவது கண் நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது.
அந்த வகையில் வரும் வாரம், கேரளாவில் இருக்கும் முதலை காவல் காக்கும் அனந்த பத்மநாப சாமி கோயில் பற்றின விறுவிறுப்பான தகவல்கள் ஒளிபரப்பாக உள்ளது. கேரளா அனந்த பத்மநாப சாமி கோயில் நிலவறையில் இருந்து கிடைத்த புதையலைப்பார்த்து உலகமே வியப்பில் ஆழ்ந்தது. அந்த அனந்த பத்மநாப சாமி கோயிலின் நீரால் சூழப்பட்ட ஆதிக்கோயிலைத்தான் ஒரு முதலை காவல் காத்து வருகிறது. சைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழும் அந்த முதலைக்கு பபியா என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.
முதலையை தரிசனம் செய்தால் அதிர்ஷ்டம் என்பதால், இந்த கோயிலுக்கு விசிட் செய்யும் பக்தர்கள் எப்படியாவது இந்த முதலையை பார்க்க துடிக்கிறார்கள். அகத்தியரின் சீடரால் உருவாக்கப்பட்ட, இந்த கோயிலின் நீர் சூழப்பட்ட இந்த குளத்திற்குள் பல ரகசியங்கள் புதைந்திருக்கிறது. இங்கு முதலை காவல் காப்பதன் பின்னணியிலும் சில அமானுஷ்யங்கள் இருக்கிறது. இந்த முதலை இறந்தால், அடுத்து, ஒரு முதலை எங்கிருந்தோ வந்து இந்த காவல் காக்கும் பணியை தொடர்கிறது..இப்படி முதலைக்கோயிலுக்குள் ஒளிந்திருக்கும் அமானுஷ்யங்கள் வரும் வாரம் நமது மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தவறாமல் பாருங்கள்.
வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி தோறும் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது மூன்றாவது கண் நிகழ்ச்சி.