Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

வீரர்களின் கொள்ளை நாடகம்

$
0
0

ரியோ டி ஜெனீரோ: ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்களில் 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் கழிப்பறையை உடைத்து, சூறையாடியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட சேதாரத்துக்கும் பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து செல்லும்படி பெட்ரோல் பங்க் பாதுகாவலர்கள் வற்புறுத்தவே இழப்பீடாக பணத்தை கட்டிவிட்டு, அங்கிருந்து விடுபட்டுவந்த அந்த நீச்சல் வீரர்கள், தங்களை சிலர் துப்பாக்கி முனையில் வழிமறித்து, பணத்தை கொள்ளையடித்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, ரியோ டி ஜெனீரோ போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விபரங்கள் யாவும் தெரியவந்தது. போலியான புகார் தெரிவித்து, தங்கள் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள்மீது பிரேசில் நாட்டு போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்காவுக்கு செல்வதற்காக விமானம் ஏறப்போன அவர்களை பிரேசில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, பாஸ்போர்ட்களை முடக்கி வைத்திருப்பதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்றுபேர் ஏற்கனவே அமெரிக்கா திரும்பி விட்டனர். தங்கள் நாட்டு நீச்சல் வீரர்களின் செயலுக்காக பிரேசில் நாட்டு மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி நேற்று வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்நிலையில், போலீசில் பொய் புகார் அளித்த அமெரிக்காவின் பிரபல நீச்சல் வீரரும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜிம்மி பெய்கென் என்பவருக்கு 35 ஆயிரம் ரியஸ் (அமெரிக்க மதிப்புக்கு சுமார் 10,927 டாலர்கள்) அபராதம் விதித்து ரியோ டி ஜெனீரோ நகர நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேற்படி அபராத தொகையை அந்நாட்டின் விளையாட்டு வளர்ச்சி அறக்கட்டளைக்கு செலுத்தியபின், அவரது பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்கும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், பிரேசிலில் கொள்ளை நாடகமாடிய தங்கள் நாட்டு நீச்சல் வீரர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

US swimmer Jimmy Feigen pays fine for Rio Olympic committee


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles