Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

ஈஷா கிராமோத்சவம் 2016

$
0
0

ஈஷா கிராமோத்சவம் 2016 - விளையாட்டம் கொண்டாட்டம் முன்னேற்றம்

மண்டல அளவிலான போட்டிகள் கோலாகல துவக்கம்!

ஆகஸ்ட் 20, கோவை: ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான இரண்டாம் கட்ட வாலிபால் போட்டிகள் கோவை, திருச்சி, ஈரோடு, விருதாச்சலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, கரூர், ராஜபாளையம், திருப்பத்தூர், மேட்டூர் ஆகிய மண்டலங்களில் நடைபெற உள்ளன. அதுமட்டுமல்லாமல் கூடவே கிராமிய கொண்டாட்டங்களும் சிறப்பாக நடைபெற உள்ளன.

ஆகஸ்ட் 21 காலை 9 மணி முதல் நாக்-அவுட் சுற்றுகளாக நடைபெறவுள்ள ஆண்களுக்கான இந்த மண்டல அளவிலான வாலிபால் போட்டிகளைத் தவிர்த்து, பெண்களுக்கான எறிபந்து போட்டிகளும் தமிழகமெங்கும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும், அன்று நாள் முழுவதும் நலிந்துவரும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் வகையில், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகள், கிராமிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் என மிகவும் கோலாகலமாக நிகழவுள்ளன.

பொங்கல் வைத்தல், கோலப் போட்டி, கயிறு இழுத்தல், உறி அடித்தல், வழுக்கு மரம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான பல்வேறு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் உள்பட தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது. வில்லுப்பாட்டு, நய்யாண்டி மேளம், பறையாட்டம், சிலம்பாட்டம், ஜமாப் உட்பட சுமார் 40 நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் தமிழகம் முழவதும் அரங்கேற்றப்படுகிறன. இந்த கொண்டாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்!

மண்டல அளவிலான போட்டிகளை எதிர்கொண்டு அடுத்தடுத்து வெற்றிபெறுபவர்கள் கோவையில் நிகழவிருக்கும் கால் இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 4ஆம் தேதியன்று கோவை கொடிசியா மைதானத்தில் கிராமோத்சவ விழாவில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கின்றன.

கிராமிய கலை நிகழ்ச்சிகள்

தமிழ்நாட்டில் மொத்தம் 100 கிராமிய கலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் பாதிகலைகள் அழிந்தே போய்விட்டன.மீதமுள்ள கலைகளில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேலுள்ள கலைகள் கடைசி தலைமுறை கலைஞர்கள் கைவசம் உள்ளது. இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் மகத்தான பொறுப்பு நமதுகைகளில்உள்ளது!

கலைகளின் காவலனாய் இந்தக் கடைசி தலைமுறை கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவிருக்கிறது ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம்.

வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், கணியன்கூத்து அல்லது மகுடம், பறையாட்டம், நெருப்புச் சிலம்பாட்டம், கட்டைக்குழல், ராஜா-ராணி ஆட்டம், ஜிம்லா மேளம், ஒயிலாட்டம், சக்கைக்குச்சி ஆட்டம், துடும்பாட்டம், கைச்சிலம்பாட்டம், சிக்காட்டம், தொன்டகபறை, தோல்பாவைக்கூத்து, கொக்கிலிக்கட்டை ஆட்டம், ஜமாப்பு, தெருக்கூத்து, குச்சியாட்டம், தேவராட்டம், தாரைதப்பு, பம்பைச் சிலம்பாட்டம்என தமிழகம் முழுவதும் இந்த கலைகள் அரங்கேற்றப்படுகிறது.

அழிந்துவரும் இந்தக் கலைகளைக் காண, தமிழகமெங்கும் 10 இடங்களில் நடைபெறவிருக்கும் ஈஷா கிராமோத்சவத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளை காணஅழைக்கிறோம்.

ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம்!

கிராமப்புற மக்களின் உடல், உள்ளம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பாட்டை எடுத்து வந்து, அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை கொண்டு வருவதற்காக சத்குரு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம் 2003ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் கிராமங்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதோடு, வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துகிறது.

Isha Gramotsavam 2016 August 21st event schedule


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles