இந்திய நிறுவன செயலர்கள் பட்டமளிப்பு விழா : கம்பெனி செகரட்டரி படிப்புக்கு வளமான எதிர்காலம்
சென்னை: இந்திய நிறுவன செயலர்கள் அமைப்பின் தென்னிந்திய பிரிவு கம்பெனி செகரட்டரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கனரா வங்கி தலைவர் டி.என். மனோகரன் தலைமை தாங்கி 210 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்தார்.
சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்க பட்டது. பட்டமளிப்பு விழாவில் நிறுவன செயலர்கள் அமைப்பின் துணை தலைவர் ஷ்யாம் அகர்வால், ஐ.சி.எஸ்.ஐ. தென் மண்டல தலைவர் சிவகுமார், மத்திய குழுஉறுபினர்கள் ராமசுப்ரமணியம், மற்றும் அகலாத ராவ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கனரா வங்கி தலைவர் டி.என். மனோகரன் பேசுகையில், "நிறுவன செயலர்கள் தங்கள் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். சட்டத்தில் நுணக்கங்களையம் மற்றும் மாற்றங்கள், தொழில் துறையில் உள்ள மாற்றங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நிறுவன செயலர்கள் நேர்மையாகவும் தொழிலுக்கு உண்மையாகவும் செயல் படவேண்டும். பட்டங்களை பெற்ற மாணவர்கள் நாட்டின் நலன் கருதி சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தவும், மேம்படுத்தவும் கடுமையாக பணியாற்ற ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்."
ஐ.சி.எஸ்.ஐ. துணை தலைவர் ஷ்யாம் அகர்வால் பேசுகையில் “நிறுவன செயலர்களின் பங்கு ஒரு நிறுவனத்துக்கு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. அவர் நிறுவனத்தின் சட்டம் மற்றும் பங்குகள் பரிவர்த்தனை தொடர்பான சட்டங்களில் நிபுணராக விளங்குவார்.”
இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செகரட்டரிஸ் ஆஃப் இந்தியா மூலம் கம்பெனி செகரட்டரிஷிப் தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவுடன் கம்பெனி செகரட்டரி ஷிப் படிக்க விரும்புபவர்கள், பவுண்டேஷன் புரோகிராம், எக்ஸிகியூடிவ் புரோகிராம், புரஃபசனல் புரோகிராம் ஆகிய மூன்று தேர்வுகளை எழுத வேண்டும். மிகப்பெரும் சவாலான பதவியாக விளங்கும் கம்பெனி செகரட்டரிஷிப் படிப்புக்கு ஷேர் மார்க்கெட், சட்ட விதிகள், திட்டமிடுதல், சமயோசித புத்தி, மூலதன முதலீட்டை கையாளும் திறன், ஆங்கில மொழி, எழுத்துத் திறன் உள்ளிட்ட விஷயங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.”
இதற்கென்ற படிப்பு படித்தவர்கள் நிறுவனத்தில் முழு நேர அலுவலராக பணிபுரியலாம். ரூ.5 கோடி மூலதனம் செய்யப்பட்ட நிறுவனங்கள் அனைத்திலும் செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என்று விதியுள்ளது. ரூ.5 கோடிக்கு குறைவாக மூலதனம் செய்யப்பட்ட நிறுவனங்களில் எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் படித்தவர்களை உதவி நிறுவன செயலாளர்களாக நியமிக்க வேண்டும்.
இதற்கான படிப்பில் ஆரம்பநிலை, நிர்வாக நிலை, தொழிற்முறை நிலை ஆகிய மூன்று நிலைகள் உள்ளன. பிளஸ் டூ தேர்வு பெற்ற அனைவரும் அடிப்படைத் தேர்வை எழுதலாம். அடிப்படைத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நிர்வாக நிலை தேர்வில் நேரடியாகச் சேரலாம். அதன் பின்பு தொழில்முறை நிலை தேர்வினை எழுத வேண்டும்.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரிய நிறுவனங்களில் ஏராளமான பணியிட வாய்ப்புக் காத்திருக்கிறது. பி.காம்., பி.பி.ஏ., மட்டுமின்றி கணிதம், அறிவியல் எடுத்து படித்த மாணவர்களும், இந்தப் படிப்பைப் படிக்கலாம். கம்பெனி செகரட்டரிஷிப் முடித்தவர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத் துறை, ஷேர் மார்க்கெட், தொழில் கூடங்கள் ரத்தனக் கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருக்கின்றன. சுயமாகவும் பிராக்டிஸ் செய்து வருமானம் ஈட்டலாம்.