Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

டோனி அண்ட் கய்

$
0
0

வெட்டுவாங்கேணியின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம்

நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிகையலங்காரம் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், லியானர்டோ டி காப்ரியோ என மேற்குலக பிரபலங்களின் சிகையலங்காரம் நம்மை வியக்க வைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிய வேளையில் தான், தமிழ்நாட்டில் தடம் பதித்தது உலகின் பாரம்பரிய மிக்க சிகையலங்கார சேவை மையமான டோனி அண்ட் கய்.

இங்கிலாந்தை பூர்விமாக கொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது புத்தம் புதிய கிளையை சென்னை - 600 115 நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, கோஹினூர் காம்ப்ளெக்ஸ், கதவு எண் 2/232 என்ற முகவரியில் திறந்துள்ளது ஐதியல் ட்ரெண்ட்ஸ் என்ற பெயரிலான டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல்.

இதனை பண்பட்ட நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசர் திறந்து வைத்தார். பால்சன் குழுமத்தின் இயக்குனர் திரு.சாம்பால் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு.மணிகண்டன் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

டோனி அண்ட் கய் நவீன சிகையலங்கார மையத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் நடைபெற்ற வண்ணமிகு பேஷன் ஷோ இத்தனை சிகையலங்காரங்களா என்று வியக்குமளவுக்கு பார்வையாளர்களை கவர்ந்தது. கண்ணை கவரும் உடைகளுடனும், கருத்தை கவரும் நவீன சிகையலங்காரத்துடனும் அழகிகளும், இளைஞர்களும் மேடையில் வலம் வந்தனர். இந்த பேஷன் ஷோவுக்கு சிகரம் வைத்தார்போல் இருந்தது சிறப்பு அழைப்பாளரான திவ்யதர்ஷிணியின் பங்கேற்பு.

நவீன நாகரீகத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் தங்களது டோனி அண்ட் கய் ஷோரூம் விளங்குவதாக பெருமிதம் கொள்கிறார் டோனி அண்ட் கய் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் திரு சாம்பால். வெட்டுவாங்கேணி டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூமின் ப்ரான்சைஸ்-ஆன திரு. பிலிப் எரிக் ஜான் மற்றும் ஜோனதன் ராய் பிலிப் ஆகியோர் கூறுகையில், ஐதியல் ட்ரெண்ட்ஸ் 2000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் மையத்தில் இருபாலருக்கான மையம், பெண்களுக்கான தனிப்பிரிவு, நீராவியுடன் கூடிய ஸ்பாக்கள், மணமக்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான 1 தனியறை போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும் என்கின்றனர்.

உங்களை நீங்களே புதியவராக உணர வேண்டுமா.. வாருங்கள், மாற்றத்தை உணருங்கள்.

Toni and Guy Essensuals Salon Neelankarai Showroom inaugurated


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles