Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

கண்மணி ராஜாமுகமது

$
0
0

அன்று: 'நன்று' - 'நன்றல்ல' : இன்று: 'செம' - 'மொக்கை' - இன்றைய தமிழை பற்றிய மனுஷ்யபுத்திரனின் கருத்து

தமிழ் திரை உலகின் முன்னணி கதை வசனகர்த்தாக்களில் ஒருவரான கண்மணி ராஜாமுகமது எழுதிய "பால்யகால சொர்கவெளி" (கவிதை தொகுப்பு), "நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை"(சிறுகதை தொகுப்பு) நூல்கள் வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் நடைபெற்றது.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் நூல்களை வெளியிட ராஜ் டிவி ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். கவிஞர் இசாக், விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, M.M அப்துல்லா வரவேற்றுப் பேசினார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகயில், "பேச்சு வழக்கில் தமிழ்ச்சொற்களின் பயன்பாடு சுருங்கி, நாம் ஏறத்தாழ அவற்றை இழந்து வருகிறோம். இப்போதெல்லம் நல்லவற்றைக் குறித்து சொல்லும் போது 'செம' என்றும் சரியில்ல என்பதற்கு 'மொக்கை' என்றும் சாதரணமாக அனைவரும் சொல்லப் பழகிவிட்டனர். நம் பண்பாடு, கலாச்சாரத்தின் இனிய சொற்களை இழந்து வருவது, தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்சனை என்பதை உடனடியாக நாம் உணர்வது அவசியம்" என்றார்.

ராஜ் டிவி ரவீந்திரன், நடிகர்கள் இளவரசு, தலைவாசல் விஜய், இயக்குனர்கள் பிருந்தாசாரதி, கேபிள் சங்கர், ஆவணப்பட இயக்குனர் அன்வர் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். கண்மணி ராஜாமுகமது ஏற்புரை நிகழ்த்தினார்.

Kanmani Raja Mohammed books released


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles