மே 28 – 29 மே 2016
சென்னை வர்த்தக மையம் , நந்தம்பாக்கம்
ரூ.1 கோடி உதவி தொகை | கல்வி கடன் |உடனடி தேர்வு
அனைத்தும் ஒரே இடத்தில்
இன்றைய சூழ் நிலையில் உயர் கல்வி கற்க அதிக செலவுகள் ஆகின்றது மேலும் நன்கு படிக்கும் மாணவர்கள் தேர்வின் போது பயத்தால் சரியான மதிப்பெண் எடுக்க முடிவதில்லை இதனை கருத்தில் கொண்டு அனைவரும் பயன் பெரும் வகையில் உலக தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் பிங்க் ஆட்ஸ் இணைந்து பன்னாட்டு கல்வி கண்காட்சியை வரும் மே 28 மற்றும் 29ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் நடை பெற உள்ளது. அந்நிகழ்வை மேதகு தமிழக ஆளுநர் துவக்கி வைக்க இசைந்துள்ளார் இந்நிகழ்வை முன்னணி உள்நாட்டு வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன.
மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க தேசிய வங்கிகளும் அரங்கம் அமைக்க உள்ளன. இக்கல்வி கண்காட்சியில் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் கல்வி கட்டணம் எவ்வளவு எனவும் பத்தாம் வகுப்பு படித்து முடித்து ஒரு வருடம் பவுண்டேஷன் கோஸ் முடித்து விட்டு நேரடியாக இளங்கலை படிப்பு மற்றும் முதுகலை படிப்பு படிக்க நேரத்தையும் கல்வி கட்டணத்தையும் மிச்சம் செய்ய மலேசியா கல்வி நிறுவனங்கள் அரங்கம் அமைக்க உள்ளன.
வசதி குறைந்தவர்களும் தங்கள் குழந்தைகளை மருத்துவம், பொறியியல், பைலட், கடல் சார் படிப்புகளை படிக்க உலக தமிழ் வர்த்தக சங்கம் 1 கோடி ரூபாயை (ஸ்காலர்ஷிப்) கல்வி உதவி தொகை ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.
இதற்காக இந்திய பொதுதுறை நிறுவனங்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் கல்விக்காக நன்கொடை செய்ய உள்ளனர் மாணவர்கள் கண்காட்சியில் உடனடி தேர்வு எழுதி கல்வி உதவி தொகை பெற வசதி ஏற்படுத்த பட்டுள்ளது. இக்கண்காட்சியில் அரங்கம் அமைக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் கல்வி உதவி தொகை வழங்க படும்.
பன்னாட்டு கல்வி கண்காட்சியில் கலந்து கொண்டு அயல் நாட்டு பல்கலை கழகத்தில் படித்தால் அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உயர் கல்வி பயிலும் போது பகுதி நேர ஊழியராக வேலை செய்ய முடியும்.
இவ்கண்காட்சியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்களும் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கும் நல்வாய்ப்பாக அமையும். மேலும் கல்வி கற்ற பணம் ஒரு பொருட்டே அல்ல என்ற சூழ் நிலை உருவாக உலக தமிழ் வர்த்தக சங்கம் முனைப்புடன் செயல்பட உள்ளது. கல்வி உதவி தொகை மற்றும் சலுகைகள் பெற www.internationaleducationfair.orgஎன்ற அகப்பக்கத்தில் பதிவு செய்யுங்கள். மேலும் விவரங்களுக்கு 9092475000 | edufair16@gmail.com