(ஞாயிறு தோறும் காலை 10.00 மணிக்கு)
புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 10.00 மணிக்கு உங்களை சிரிக்க வைக்கும் கலாட்டா நகைச்சுவை “இப்படி பண்றீங்களேம்மா….” எனும் புதுமையான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது.
இதில் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அன்றாடம் நாம் சந்திக்கும் சம்பவங்களையெல்லாம் மையப்படுத்தி வாரந்தோறும் வயிரு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். நாம் வழக்கமா பார்த்த சினிமா காட்சிகளை, டிவி நிகழ்ச்சிகளை கலாட்டாவாக மாற்றி கலாய்ப்பது இந்நிகழ்ச்சியின் ஹைலைட்.
வாரம் தோறும் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ”இப்படி பண்றிங்களே மா” நிகழ்ச்சியில் மேலும் கலாய்க்கும் வகையில் வாரம்தோறும் புதிதாக வெளிவரும் படங்களை சராசரி மனிதனின் பார்வையில் கலாட்டா காமெடியுடன் கலந்து விமர்சனமாக இப்போது ஒளிபரப்பாகிறது.
சண்டே காலையில காமெடிக்கு கியாரண்டி கொடுக்கிறார்கள் காமெடியில் கலக்கும் அரவிந்த், விக்னேஷ், அன்பு மற்றும் குழுவினர்..மறக்காம பார்த்து சிரிங்க... உங்கள் புதுயுகத்தில் ஞாயிறு தோறும் காலை 10.00 மணிக்கு காணத்தவறாதீர்கள்.