Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

“தலைவர்களுடன்”

$
0
0

(வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு)

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “தலைவர்களுடன்” நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

அரசியல் கட்சி தலைவர்களுடன் ஒரு நாள் முழுவதும் பயணித்து அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்களின் தினசரி வாழ்க்கையின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை படம்பிடித்து காட்டும் வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகள், அவர்கள் அன்றாட அரசியலை எப்படி பார்க்கிறார்கள் என்பனவற்றை பற்றியெல்லாம் சுவாரஸ்யமான பேட்டிகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.

மேடை பேச்சுகளிலும் அரசியல் அரங்குகளிலும் மட்டுமே பார்க்கப்படும் அரசியல் கட்சி தலைவர்களின் வீடு எப்படி இருக்கும்? அவர்களின் அன்றாட வாழ்வு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். அத்தகைய ஆர்வத்திற்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியே தலைவர்களுடன்.

தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சி தலைவர்களை பற்றி அறிந்து கொள்ளவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை புதிய தலைமுறையின் உள்ளீட்டு பிரிவு ஆசிரியர் தியாகச் செம்மல் தொகுத்து வழங்குகிறார்.

தனிச்சிறப்பு – முழுக்க முழுக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசியல் தலைவர்களிடம் எடுக்கப்படும் பேட்டி என்பது கூடுதல் சுவாரஸ்யம்…

Puthiyathalaimurai program Thalaivargaludan


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles