விவோ புரோ கபடிப் போட்டியில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தபாங் டெல்லி அணியை பெங்களூரு புல்ஸ் அணி வீழ்த்தியது
புரோ கபடிப் போட்டியின் 5-வது சீசன் ஆட்டங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏ மண்டலத்தில் உள்ள டெல்லி தபாங் அணிக்கும் பி மண்டலத்தில் உள்ள பெங்களூரு புல்ஸ் அணிக்கும் இடையே வைல்ட் கார்ட் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டம் இந்த சீசனின் 119-வது போட்டியாகும்.
இதில் புல்ஸ் அணி 35-32 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி கோர்ட்டைத் தேர்ந்தெடுத்தது.
பெங்களூரு அணியின் அஜ்ய் தொடு புள்ளியைப் பெற்று கணக்கைத் தொடங்கினார்.
தபாங் டெல்லி அணி 3-வது போனஸ் புள்ளியைப் பெற்ற நிலையில் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சம நிலை வகித்தன.
தொடர்ந்து இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகளைப் பெற்ற நிலையில் டெல்லி அணி 8-7 என்ற கணக்கில் 1 புள்ளி முன்னிலை பெற்று திகழ்ந்தது.
பின்னர் இரு அணிகளும் 9-9 என்ற கணக்கில் சம நிலை பெற்றன.
அதே சமயம் ரோஹித் ஒரு தொடு புள்ளியை எடுக்க புல்ஸ் அணி 10-9 என்ற கணக்கில் முன்னிலையை எட்டியது
இந்த நிலையில் தபாங் டெல்லி ஆல் அவுட் ஆக பெங்களூரு அணி 15-9 என்ற கணக்கில் முன்னலைக்குச் சென்றது.
முன் பாதி முடிவில் புல்ஸ் அணி 17-9 என்ற கணக்கில் முன்நிலை பெற்றுத் திகழ்ந்தது.
பின் பாதியில் புல்ஸ் அணி 22 புள்ளிகள் பெற்ற நிலையில் டெல்லி அணி 15 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி அணியின் ரோஹி பலியான் சூப்பர் டென் எடுத்தார்.
இந்த நிலையில் டெல்லி வீரர் ஸ்ரீகாந்த் யாரையும் தொடாத நிலையில் அவரைப் பிடித்த நான்கு வீரர்கள் சுயமாக ஆட்டமிமிந்தனர். இதையடுத்து டெல்லி அணிக்கு 4 புள்ளிகள் கிட்டியது. இந்த நிலையில் புல்ஸ் அணி 28-21 என்ற கணக்கில் 7 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்த நிலையில் மெராஜ் ஷேக்கை சூப்பர் டேக்கிள் மூலம் 2 புள்ளிகள் எடுத்து அதே நேரம் புல்ஸ் அணி ஆல் அவுட்டாக 27-30 என்ற கணக்கில் டெல்லி அணியின் முன்னிலை வெகுவாக குறைந்தது.
புல்ஸ் அணியின் பெஹல் ஹை பை எடுத்தார். இறுதியில் புல்ஸ் அணி 35-32 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் புல்ஸ் அணியின் அஜய், ரோஹித் இருவரும் சூப்பர் டென் எடுத்தார்.