Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையின் மனிதசங்கிலி நிகழ்வு!

$
0
0

சென்னை, 2017, செப்டம்பர் 8 :  2017ஆம் ஆண்டின் தேசிய கண்தான அரைத்திங்கள் அனுசரிப்பு நிகழ்வு ஒரு பகுதியாக கண் தானம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க சென்னையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவமனையான டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை ஒரு மனிதசங்கிலி நிகழ்வை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனைக்கு முன்பாக இன்று நடத்தியது.

தேசிய கண் தான விழிப்புணர்வு அனுசரிப்பானது, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை இரு வார காலத்திற்கு அனுசரிக்கப்படுகிறது.

மனிதசங்கிலி நிகழ்வானது பிரபல திரைப்பட நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவரான டாக்டர். அமர் அகர்வால் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தார்.

கல்லூரி மாணவர்கள், டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் & பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய, பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான நபர்கள் இந்த மனிதசங்கிலி நிகழ்வில் மிக ஆர்வத்தோடு பங்கேற்றனர். பெரும் திரளாக பலர் பங்கேற்ற இந்த மனித சங்கிலி நிகழ்வானது, கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கியது. இதன் விளைவாக கண் தானம் அளிப்பதற்கான உறுதிமொழிகளில் பலர் ஆர்வத்தோடு தங்கள் ஒப்புதலை வழங்கி கையெழுத்திட்டது. இந்நிகழ்வின் வெற்றியை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.

பிரபல திரைப்பட நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் இந்நிகழ்வில் பேசுகையில், “இந்தியா போன்ற வளரும் நாடுகள் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சினைகளுள் ஒன்றாக பார்வைத்திறனிழப்பு இருக்கிறது. பார்வையற்ற நபர்களுக்கு பார்வைத்திறன் அளிப்பதற்காக தங்களது கண்களை தங்களது இறப்பிற்கு பிறகு தானமாக வழங்க எண்ணற்ற நபர்கள் ஆர்வத்தோடு முன்வர வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இந்த உயரிய நோக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்,” என்று கூறினார்.

டாக்டர். அகர்வால் கண்மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் பேசுகையில்உலகளவில் 45 மில்லியன் பார்வைத்திறனற்ற நபர்கள் இருக்கின்றனர். அவர்களுள் 12 மில்லியன் நபர்கள் பார்வைத்திறனின்றி இந்தியாவில் மட்டும் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையில் நிறமிலி இழைம பார்வை இழப்பால் (corneal blindness) அவதிப்படும் 1நபர்களும் உள்ளடங்குவர். டாக்டர். அகர்வால் கண் மருத்துவனையில் பணியாற்றும் நாங்கள்தேசிய கண் தான அரைத்திங்கள் நிகழ்வை டாக்டர். அகர்வால் குழுமத்தின் கண் மருத்துவமனைகள் அனைத்திலும் அனுசரிக்கிறோம். கண் தானத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்காக பொதுமக்களை ஒரு பொது தளத்தில் ஒன்றுகூட்டுவதற்காக பிரச்சாரத் திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம்,” என்று கூறினார்.

கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை இந்த மனிதசங்கிலி நிகழ்வு ஏற்படுத்தியது. 500-க்கும் அதிகமான நபர்கள் சுயவிருப்பத்தோடு முன்வந்து தங்களது கண்களை தானமளிப்பதற்கான விருப்பத்தை தெரிவித்து கையொப்பமிட்டு உறுதிமொழி வழங்கியிருக்கின்றனர். இத்தகைய உறுதிமொழி வழங்கியவர்களுக்கு கண்தானமளிப்பவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

Dr Agarwal Eye hospital organizes Human Chain to create public awareness

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/Agarwal-09-09-17]


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles