நியூஸ் 18 தமிழ்நாடு “பயிர்த் தொழில் பழகு”
(சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு மற்றும் ஞாயிறு காலை 11:30 மணிக்கு)
வேளாண்மையில் நமக்கு ஆயிரம் ஆண்டு கால அனுபவம் இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் நீர்ப் பற்றாக்குறை, ஆதாயம் இல்லாத தொழிலாக மாறியது என பல்வேறு காரணங்களை முன்வைத்து வேளாண் தலைமுறை இதில் இருந்து இடம் மாறியது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு ஓர் இளைஞர் பட்டாளம் சேற்றில் இறங்கியுள்ளது.
இவர்கள் மரபு தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல் உலகம் முழுக்க உள்ள நவீன வேளாண் நுட்பங்களை தமிழ் மண்ணுக்கு கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இதன்மூலம் விவசாய வருமானத்தை உயர்த்தி, இனியும் விவசாயம் என்பது நஷ்டமான தொழில் இல்லை என உலகுக்கு அறிவிக்கிறார்கள்.
இந்த மாற்றங்களை உள்ளது உள்ளபடியே பதிவு செய்யும் நிகழ்ச்சிதான் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் ‘பயிர்த் தொழில் பழகு’ நிகழ்ச்சி.
விவசாயத்தின் புதிய மாற்றங்களையும், அதன் வெற்றியாளர்களையும் அறிமுகப்படுத்தும் பயிர்த் தொழில் பழகு நிகழ்ச்சி, நவீன கண்களின் வழியே தமிழ் சமூகத்தின் ஆக பிரதான தொழிலை அணுகுகிறது. இந்நிகழ்ச்சியை விஜய் ஆனந்த் தொகுத்துவழங்குகிறார்.