வள்ளியம்மை பொறியியற் கல்லூரியானது மதிப்புமிக்க எஸ்.ஆர்.எம் கல்வி குழுமங்களின்; 16 கல்வி நிலையங்களுள்; ஒன்றாக வள்ளியம்மை அறக்கட்டளையின் கிழ் இயங்கி வருகிறது.
இக்கல்லூரி பொறியியல் தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் கணினி பயன்பாடுகள் தொடர்பாக 7 இளங்கலை பாடப்பிரிவுகளும் மற்றும் 8 முதுகலை பாடப்பிரிவுகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் 7 ஆராய்ச்சி நிலையங்களும் அண்ணா பல்கலைக்கழக அனுமதியுடன் செயல்படுகிறது.
இக்கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவானது செப்டம்பர் 2, 2017 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இப்பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர். முனைவர் பா.இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். அவரது சிறப்புரையில் பொறியியல் படிப்பு என்பது வெறும் கல்வியோடு மட்டும் நின்றுவிடாமல் சமுதாய நலனுக்கும், எதிர்காலத் தேவைக்கும் தகவல் பரிமாற்ற திறமைகள் மற்றும் ஆக்கப்பூர்வ சிந்தனை உடையதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும், எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமங்களின் நிறுவனத்தலைவருமான டாக்டர் தா.ரா.பாரிவேந்தர் அவர்கள் தலைமையுரையாற்றினார். அவரது தலைமையுரையில் பொறுப்புள்ள குடிமகனாக பணிபுரியும் இடத்திலும், வெளியுலகத்திலும் செயல்படுவதற்குத் தேவையான கடமைகளையும், எண்ணங்களையும் மாணவர்கள் பெற்றிருக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். அவர் மேலும் பொறியியல் தொழில் நுட்ப ஆராய்ச்சியின் தரத்தினை உயர்த்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் இயக்குநர் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைதுணை வேந்தருமான முனைவர் தி.பொ. கணேசன் அவர்கள் வரவேற்புரையில் அனைவரையும் பாராட்டும் வகையில் மாணவர்களின் செயல்பாடு மிளிர வேண்டும் என்று கூறினார்.
முனைவர் நா. சேதுராமன், பதிவாளர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அவர்களும் இப்பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.சிதம்பரராஜன் அவர்களின் ஆண்டு அறிக்கையில் கல்லூரியின் சாதனைகளை எடுத்துரைத்தார்.
மேலும் துணை முதல்வர் முனைவர் ம.முருகன் அவர்கள் அண்ணாப் பல்கலைக்கழகத் தேர்வின் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 25 மாணவர்களின் பெயர் பட்டியலை வாசித்தார். அதனைத் தொடர்ந்து இப்பட்டமளிப்பு விழாவில் 25 மாணவர்களுக்கு பதக்கங்களும் மற்றும் 915 மாணவர்களுக்கு பட்டமளிப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/SRM-02-09-17]