SRM பல்கலைக்கழகம் நுண் அறிவியல் மற்றும் நுண் தொழில்நுட்பவியல் துறையில் நான்காவது - கருத்தரங்கம் (ICONN' 2017)
ஆகஸ்ட் 09.11.2017: SRM பல்கலைக்கழகத்தில் நுண் அறிவியல் மற்றும் நுண் தொழில்நுட்பவியல் இரண்டாண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் கருத்தரங்கானது நான்காவது முறையாக ஷிசுவோகா பல்கலைக்கழகம் ஜப்பான், ஜி.என்.எஸ் (புவியியல் மற்றும் அணுவியல்) நியுசிலாந்து, தேசிய சியோ துங் பல்கலைக்கழகம் தைவான் ஆகியன எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் நுண் தொழில்நுட்பவியல் துறையுடன் ஒருங்கிணைந்து பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்தியுள்ளது. அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், பொறியியல் மற்றும் தொழில் நுட்பவியல் புலம், மருத்துவம் மற்றும் உடநல அறிவியல் புலம், நிர்வாக மேலாண்மையியல் புலம் மற்றும் சட்டவியல் புலம் ஆகியவற்றில் கல்வியில் மற்றும் ஆராய்ச்சியில் முன்னோடியாக இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் SRM பல்கலைக்கழகம் திகழ்கிறது.
இந்தக் கருத்தரங்கின் நோக்கமானது ஆய்வாளர்களுக்கும் மற்றும் விஞ்ஞானிகளுக்கும் ஓர் அடித்தளமாக அமைவதுடன் நவீன ஆய்வுப்போக்கின் வளர்ச்சியினை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தக்கருத்தரங்க அமர்வின் தலைப்புகளாக நுண் அமைப்பியல் கருவிகள் மற்றும் மெல்லிய மென்படலம், நுண் மின்னணு உணர்வீயியல் மற்றும் MEMS (நுண்ணிய மின்னணு இயந்திரப் பொறியியல் அமைப்பு) ஒளியணுவியல், பிளாமோனிக்ஸ், நுண் காந்தவியல் ஆகிய தலைப்புகளில் நடைபெற்றுள்ளன.
ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரேலியா, ஷிசுவோகா பல்கலைக்கழகம் – ஜப்பன், தொகூகு பல்கலைக்கழகம் – ஜப்பான், விக்டோரியா பல்கலைக்கழகம் – நியுஸிலாந்து மற்றும் ஐஐடி மெட்ராஸ், ஐஐடி டெல்லி, ஐ.ஐ,எஸ்சி பெங்களுரு, பி.ஏ.ஆர்.சி மும்பை மற்றும் டி.ஐ.எப்.ஆர் மும்பை போன்றன முன்னோடி நிறுவனங்களிலிருந்து சிறந்த ஆராய்ச்சி கருத்து உரையாளர்களைக் கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட விஞ்ஞானம் சம்பந்தமான அமர்வுகள் நடைபெற்றுள்ளன. ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்டு நடைபெற்றுள்ளது. இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாய்மொழியாகவும், விளம்பரத்தட்டி வாயிலாகவும் மிகச்சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு ‘மிகச்சிறந்த ஆய்வாளர்’ என்ற விருதினை வழங்கியுள்ளது.
இந்தக் கருத்தரங்கின் வரவேற்புரையை SRM பல்கலைக்கழகப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் இயக்குநர் முனைவர் C.முத்தமிழ்ச்செல்வன் அவர்கள் வழங்கினார். அறிமுகவுரையைக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் டி. ஜான்திருவடிகள் அவர்கள் வழங்கினார். தலைமையுரையை SRM பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமாகிய Dr.T.R. பாரிவேந்தர் ஐயா அவர்கள் வழங்கினார். மேலும் இப்பல்கலைக்கழகத்தின் ஆனி வேராகிய இனைத்துணை வேந்தர் முனைவர் தி.பொ. கணேசன் அவர்கள் முன்மொழிந்தார்.
சிறப்புரையை தைவானில் உள்ள தேசிய சியோ துங் பல்கலைக்கழகத்தின் மூத்த துணைத்தலைவர் முனைவர் எட்வர்டு யி சாங்கு அவர்கள் வழங்கினார். இக்கருத்தரங்கின் துவக்கவுரையை CSIR – இன் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குநர் முனைவர் D.K. அஸ்வல் அவர்கள் வழங்கினார். பாராட்டுரையை SRM பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ந. சேதுராமன் அவர்கள் வழங்கினார். இவ்விழாவின் நன்றியுரையை அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தலைவர் முனைவர் இர. பாலசுப்ரமணியன் அவர்கள் வழங்கினார்.
[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/SRM-University-09-08-17]