Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

அபோல்லோ ஹாஸ்பிடல்ஸ்- மாபெரும் முன் முயற்சி!

$
0
0

சென்னை, 18 ஜூலை 2017ஆசியாவின் முன்னணி மற்றும் அதிநவீன மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் குரூப்பான அபோல்லோ ஹாஸ்பிடல்ஸ், இன்று சென்னையில் முதன் முறையாக, தற்போது மிக அவசியமானதாகவும் இருக்கும் தலைவலி, மைக்ரேன் மற்றும் டிமென்ஷியா ஆகிய  பிரச்னைகளுக்கு தீர்வுகள் அளிக்கும் வகையில் ஒரு மாபெரும் முன் முயற்சியாக ’அபோல்லோ மெமரி அண்ட் அபோல்லோ ஹெட் ஏக் & மைக்ரேன் க்ளினிக்ஸ்’–ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

க்ரீம்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் அபோல்லோ மருத்துவமனைகளில் அமைந்துள்ள இந்த சிறப்பு க்ளினிக்குகள்,போல்லோ மருத்துவமனைக் குழுத்தின் தலைவர்,டாக்டர் பிரதாப் சி. ரெட்டி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.இந்த சிறப்பு க்ளினிக்னிக்குகள், மிகவும் அனுபவம் வாய்ந்த நரம்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நரம்பியல் வல்லுநர்களின் தலைமையின் கீழ்  இயங்கும். மேலும் இந்த க்ளினிக்குகள் நீண்டகால தலைவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் டிமென்ஷியா (நினைவு இழப்பு) மற்றும் உளவியல் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான சிறப்பு சிகிச்சைகளை அளிக்கும். அபோல்லோ தலைவலி & மைக்ரேன் க்ளினிக் திங்கள் முதல் சனிக்கிழமை வரை,காலை 11.00 – முதல் மதியம் 1.00 மணி வரை இயங்கும். அபோல்லோ மெமரி கிளினிக் மதியம் 2.00 p.m. - 4.00 p.m. வரை இயங்கும்.

தொடக்கவிழாவில் அபோல்லோ மருத்துவமனைக்குழுமத்தின்நிர்வாகத்தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டிகூறுகையில், "மைக்ரேன் ஆராய்ச்சி அறக்கட்டளை கூற்றுப்படி, உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்கள் மைக்ரேன் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றைத்தலைவலியால் ஏற்படும் வலியானது நம்மை செயலிழக்கச் செய்வதோடு சில நேரங்களில் முழுமையாக பலவீனமாக்கி விடும். அபோல்லோ மெமரி மற்றும் தலைவலி - மைக்ரேன் க்ளினிக்கின் அறிமுகமானது, அபோல்லோ மருத்துவமனைகளானது,தனது நோயாளிகளுக்கு அவசியமான தீர்வுகளையும் சிகிச்சைகளையும் தனிப்பட்ட தேவைகள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த முறையில் அளிக்கவேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாடே இந்த  ’அபோல்லோ மெமரி மற்றும் ஹெட் ஏக்’ க்ளினிக்குகளின் ஆரம்பம். அதிகரித்து வரும் பல்வேறு வாழ்க்கை முறை மாற்றங்களினால், தலைவலி என்பது அனைவருக்கும் பொதுவானதாக மாறி வருகின்றது. மேலும் இது நம்முடைய ஆக்கப்பூர்வமான செயல்திறனை பெரிதும் பாதிக்கின்றன. நம்மில் பலர் தலைவலியைக் கண்டுக்கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள் அல்லது தாங்களாகவே தங்களுக்கு சுய மருத்துவம் மேற்கொண்டு வருகிறார்கள். இப்பழக்கம் இன்று கவலையளிக்கும் ஒன்றாக உருவெடுத்து இருக்கிறது.  இப்பிரச்னைகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானதாகும். அதை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்களுக்கு உதவும் வகையிலும் இந்த சிறப்பு க்ளினிக்குகளை அறிமுகப்படுத்தியிருப்பது அடுத்தக்கட்ட முயற்சியாக இருக்குமென்பதை  நாங்கள் நம்புகிறோம். "

 இந்த புதிய ஒரு ஸ்டாப் க்ளினிக்குகளின்அறிமுகம் குறித்து,  அபோல்லோ மருத்துவமனைக்குழுமத்தின்துணைத் தலைவர் திருமதி ப்ரீதா ரெட்டி கூறுகையில், "நிபுணத்துவம் வாய்ந்த இந்த சிறப்பு க்ளினிக்குகள், நோயைக் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சைகளை மேற்கொள்வதை மிகவும் எளிதான ஒன்றாக்கி இருக்கின்றன. இப்பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அவர்களுக்கு தேவையான பரிசோதனைகளை அபோல்லோ தலைவலி & மைக்ரேன் க்ளினிக்கின் ,நரம்பியல் ஆலோசகர், மனநலம் மருத்துவர், ஃபிசியோதெரபிஸ்ட் மற்றும் குடும்பநல மருத்துவர் ஆகியோரால் பரிசோதிக்கப்படும். அதன்பிறகு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் முறையாக மேற்கொள்ளப்படும். நரம்பியல், மனநலம், ஃபிசியோதெரபி மற்றும் குடும்பநலம் என இந்த நான்கு சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் ஒரு முழுமையான பரிசோதனையை அபோல்லோ தலைவலி & மைக்ரேன் க்ளினிக் மேற்கொள்வதால்,  இது தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு தகுந்த சிகிச்சையளிக்க மிகவும் சிறந்த வழியாகும்" என்றார்.

இதேபோல், அபோல்லோ மெமரி கிளினிக்,  நினைவு குறைப்பாடுகளுக்கு பல்வேறு மருத்துவ நடைமுறைகளின் கீழ், ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் உள்ளிட்ட ஞாபகத்திறன் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகள் காணும் வகையில், அடையாளம் காணுதல்,  அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் தேவையான சிகிச்சையளித்தல் என மக்களுக்கு ஆதரவுக்கரம்நீட்டுகிறது.

’’அடிக்கடி நினைவுகள் இழப்பது அல்லது மறதி அதிகரிப்பது தொடர்பான பல அறிகுறிகள் தென்பட்டாலும், அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்கள் புறக்கணித்து விடுகிறார்கள். இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வுகள் காணும் முறையாக, மெமரி க்ளினிக், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா விஷயத்தில் மூளையின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கும், அதன்மூலம் நோயைக் கண்டறிவதற்கும் உதவுகிறது" என்று திருமதி ப்ரீதா ரெட்டிமேலும் தெரிவித்தார்.

அப்பல்லோ தலைவலி & மைக்ரின் கிளினிக்:

‘அபோல்லோ தலைவலி மற்றும் மைக்ரேன் க்ளினிக்’ என்பது, விரிவான தீர்வுகளை கொண்டிருக்கும் ஒரு முழுமையான மருத்துவ மையமாகும். இவை பல்வேறு-ஒழுங்குமுறைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் நவீன க்ளினிக்குகள் ஆகும். மேலும் இவை சிகிச்சைக்கு அனைத்து அம்சங்களையும் ஒன்றிணைக்கும் அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. மருத்துவத் தீர்வுகளை அளிப்பதில் அபோல்லோ தலைவலி மற்றும் மைக்ரேன் க்ளினிக்குக்கு இருக்கும் பெரும் அனுபவம், சிக்கலான அல்லது கடினமான தலைவலி நிலைமைகளையும் மிகுந்த அக்கறையுடன் அணுகி தீர்வு காண உதவும்.  சிலநேரங்களில் சிலருக்கு பலமுறை உண்டாகும் வலிகள் கண்டுக்கொள்ளப்படாமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும்போது, அவை அவர்களை செயல் இழக்கச் செய்வதோடு, மூளை முழுவதையுமே பாதிக்கும் அபாயம் உள்ளது. உலகெங்கிலும் நம்மை செயல் இழக்க செய்து இயலாமைக்குத் தள்ளும் முக்கிய காரணமாக தலைவலி இருக்கிறது. தலைவலி ஒரு தொற்றுநோயுடன் தொடர்புடைய ஒரு முக்கிய அறிகுறியாகவும் இருக்கலாம். தொண்டைப் புண், காய்ச்சல் அல்லது சில சந்தர்ப்பங்களில் இது மூளையின் கட்டி போன்ற முக்கிய பிரச்னைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். மைக்ரேன் பிரச்னையானது, ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் காட்டிலும் மிகக் கடுமையானது. இந்தியர்களில் 50 மில்லியன் மக்கள் மைக்ரேன்னால் பாதிக்கப்பட்டு உள்ளனர், இவர்களில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு மைக்ரேன் நீண்ட காலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘அபோல்லோ தலைவலி மற்றும் மைக்ரேன் க்ளினிக்குகள்’ தனக்கென ஒரு ப்ரத்யேகமான சிறப்புக் குழுவைக் கொண்டுள்ளன. இந்த ப்ரத்யேகமான சிறப்புக்குழு அவை தலைவலிக்கு காரணமான அடிப்படை காரணம் மற்றும் அதைத் தூண்டுவதற்கான காரணமான புள்ளியைக் கண்டறியப்படுவதற்கு உதவும். தலைவலி பிரச்னைகளுக்கு தீர்வு காண, சிறப்புக்குழுவில் நரம்பியல் நிபுணர்கள், இண்டர்வென்ஷனல் வலி நிபுணர்கள், உடல்நலப் பயிற்சி சிகிச்சையாளர்கள் மற்றும் வலி உளவியலாளர்கள் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

தலைவலி வகைகள்:

தலைவலியின் தீவிரத்தன்மை மற்றும் அதைத் தூண்டும் புள்ளிகளைப் பொறுத்து, தலைவலி பின்வரும் வகைகளில் இருக்கலாம்:

மைக்ரேன்தலைவலி:தலைவலி ஒரளவுக்கு கடுமையாகவோ அல்லது மிகக் கடுமையானதாக இருக்கும், பெரும்பாலும் ஒரு பக்கமாகவும், தலைக்குள் சலசலப்பை உருவாக்குவதாகவும் இருக்கும். இவை  குமட்டல், வாந்தி மட்டுமன்றி விளக்குகள் மற்றும் ஒலிகள் மீதான உணர்திறன் தொடர்பினால் தலைவலியை உண்டாக்குவதாகவும் இருக்கும்.

பதற்றம் தலைவலி:தலைவலி தலையின் இரு பக்கங்களிலும் மிதமான அளவு முதல் கொஞ்சம் கடுமையான அளவு வரையில் இருக்கும்.

க்ளஸ்டர் தலைவலி:தலையில் ஒரு பக்கமாக இருக்கும் தலைவலி இது. இந்த தலைவலி மிகவும் கடுமையானதாக இருக்கும். நாளொன்றுக்கு  எட்டு முறை இத்தலைவலி உண்டாகலாம். ஆனால் இது நான்கு மணி நேரத்திற்கு குறைவான நேரமே நீடிக்கும்.

ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal neuralgia): தீவிரமாக முகத்தில் வலியை உண்டாக்கும் தலைவலி. ட்ரைஜெமினல் நரம்புக் கிளைகளுடன் இணைந்து முகம் வலிக்கும் நிலையை ஏற்படுத்தும். அப்போலோ மெமரி கிளினிக்:

அபோல்லோ மெமரி க்ளினிக்

அபோல்லோ மெமரி க்ளினிக்’ என்பது, மனச்சிக்கல் மற்றும் நினைவு தவறுதல் பிரச்னைகள் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு இருக்கும் லேசான மனப்பதட்டம் மூலம் கடுமையான டிமென்ஷியா பாதிப்பு இருப்பின், அதைக் கருத்தில் கொண்டு நோயைக் கண்டறிதல்,  (தேவைப்படும்போது) சிகிச்சையளித்தல், மற்றும் ஆலோசனை வழங்குதல் என அனைத்து அம்ச தீர்வுகளையும் உள்ளடக்கிய முழு சிகிச்சை மையமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் முறையாக, ஒரு முழுமையான மெமரி க்ளினிக்காக உருவாகி இருக்கும் ’அபோல்லோ மெமரி க்ளினிக்’ , க்ரீம்ஸ் சாலையில் இருக்கும் அபோல்லோ மருத்துவமனைகளில் செயல்படுகிறது.

நாங்கள் வழங்கும்சேவைகள்:

• நினைவு மற்றும் அறிவாற்றல் மதிப்பீடு

• தினசரி வாழ்வின் நடவடிக்கைகள் மதிப்பீடு

• துல்லியமாக கண்டறியும் பரிசோதனைகள்

• பிரச்னைகள் தொடர்பான கல்வி மற்றும் அதை சமாளிப்பதற்கான பயிற்சிகளை வழங்குதல்

• குடும்பம் மற்றும் கவனிப்பாளர்களுக்கு உதவி, ஆலோசனை மற்றும் பயிற்சியளித்தல்

 

Apollo Hospitals launches Specialized Memory Clinics


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles