சென்னை:நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு வரும் ஜூலை 1ம் தேதி தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இதில் தங்க நகைக்கு 3 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தங்க நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது நகைகளுக்கு ஒரு சதவீதம் வாட் வரியும், ரூ. 10 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்பவர்களுக்கு ஒரு சதவீதம் மத்திய அரசின் கலால் வரியும் விதிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு தற்போது 3 சதவீத ஜி. எஸ். டி. வரியை விதித்துள்ளது. இதனால் பாரம்பரியமாக நகை தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் நிறுவனங்கள் மட்டுமே தொழிலில் நீடிக்கும் நிலை உருவாகும்.
மேலும் 3 சதவீதம் வரி விதிப்பால் தங்கம் கிராம் ரூ. 4,500 வரை (பவுன் ரூ. 36 ஆயிரம் விலை) உயர்ந்து, நுகர்வோரும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.