லக்னோ: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்ததை அடுத்து, கோழி இறைச்சியின் விலை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வர்த்தகச் சந்தை நிலவரத்தை கண்காணித்து வரும், "அசோச்சம் பொருளாதார முகமை" கூறியுள்ளதாவது:
மாட்டிறைச்சி தடை விதித்தது தொடர்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்திய ஆய்வுகளில், வரும் ரம்ஜான் பண்டிகை நெருக்கத்தில் கோழி இறைச்சியின் விலை 30 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும், மேலும் இனிவரும் காலங்களில் கோழி இறைச்சிக்கான தேவையும் 40 சதவீதம் வரை உயரலாம் என கூறப்படுகிறது.