சென்னை: தமிழக அரசு பள்ளி கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது, அதன்படி 12, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர்களை அறிவிக்காதது, 12, 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ரேங்க் முறையிலிருந்து கிரேட் முறையாக மாற்றியது. +1 வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை அறிவிக்கப்பட்டது உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தேர்வு நேரம் மூன்று மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்படுகிறது. மேலும் மதிப்பெண்கள் பாடவாரியாக 200-ல் இருந்து 100 மதிப்பெண்களாக குறைகிறது. அதன்படி மொத்த மதிப்பெண் 1200-ல் இருந்து 600 ஆக குறைக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.