சென்னை:தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
"பள்ளி மாணவர்களின் முழு விவரங்களை கம்ப்யூட்டரில் ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளன. ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்களின் திறமைகள், தேர்வு மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை அறியலாம். மேலும் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை, கல்விச்சூழல், ஆசிரியர்களின் விவரம் ஆகியவற்றையும் அரசு எளிதாக அறிய முடியும்.
ஸ்மார்ட் கார்டுகள் வந்துவிட்டால் மாற்றுச் சான்றிதழ்களுக்கான தேவைகள் இருக்காது. ஒருங்கிணைக்கப்படும் தகவல்கள் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.