சென்னை: "தி இந்து" ஆங்கில நாளிதழின் தொழிலாளர்கள் சங்க தலைவராக கனிமொழி எம்.பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழிலாளர்கள் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் இத்தொழிற்சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை கனிமொழி பெற்றுள்ளார்.
தொழிற்சங்கத்தில் மொத்தம் உள்ள ஆறு பதவிகளில் ஐந்து இடங்களில் கனிமொழி அணியினர் வெற்றி பெற்றுள்ளனர், 3 ஆண்டு காலம் இவர்கள் பதவியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.