Quantcast
Viewing all articles
Browse latest Browse all 6182

முக்கிய ஆவணத்துடன் ஓடிய விஜயபாஸ்கரின் கார் டிரைவர்

சென்னை:தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், மற்றும் அவருடைய உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனையின் போது விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணத்தை அவரது கார் டிரைவர் எடுத்து கொண்டு வெளியே ஓடினார். அவரை சிஆர்பிஎஃப் வீரர்கள் மடக்கி பிடித்தனர். ஆனால் அவர் மதில் சுவர் வெளியே அந்த ஆவணத்தை தூக்கி வீசிவிட்டார்.

அப்போது, வெளியே நின்று கொண்டிருந்த விஜயபாஸ்கரனின் ஆதரவாளர் ஒருவர் அதனை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். அவரை சிஆர்பிஎஃப் வீரர்களால் பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் வெளியே வீசிய அந்த கார் டிரைவரை சிஆர்பிஎஃப் வீரர்கள் தடியால் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

Image may be NSFW.
Clik here to view.
Vijayabaskers car driver try to escape with important documents


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles