சமூகநலத்துறை, எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை & ஆராய்ச்சி நிலையம், காட்டாங்குளத்தூர் மற்றும் பொது சுகாதார கல்லூரி & சமூக நலத்துறை, நீயூ சௌத்வேல்ஸ் பல்கலைக்கழகம், சிட்னி, ஆஸ்திரேலியா, இணைந்து வாழ்க்கை முறை நோய்களின் மேலாண்மையில் உள்ள சவால்களை குறித்த மாநாடு 31st மார்ச் & 1st ஏப்ரல் 2017 அன்று நடத்தப்பட்டது.
கருத்தரங்கிள் தொற்றா நோய்களின் உலக சுமை, நோய் தொற்று அறிவியல், காலத்திற்கேற்ப மாற்றங்கள் & தற்போதைய நிலவரம், வாழ்முறை மாற்றங்களுடன் தொடர்புள்ள நீரழிவுநோய், இரத்த அழுத்தம், புற்று நோய், இதய நாள நோய்கள் மற்றும் பக்கவாதம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
மரு. அ. இராமச் சந்திரன், இயங்குனர், ராமசந்திரன் மருத்துவமனை, சென்னை, நம் நாட்டின் புகழ் பெற்ற நீரழிவு நோய் நிபுணர்களில் ஒருவர். இராமச் சந்திரன் தன்னுடைய தொடக்க உரையில் இந்தியர்கள் மரபணுரீதியாக நீரழிவு நோய் வர அதிக வாயப்புள்ளவர்களாக இருப்பதாகவும், மேலும் நீரழிவு நோயாளிகள் எண்ணிக்கை ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருப்பதாகவும் கூறினார்.
மரு. பிரகாஷ் சுப்பராயன், நிர்வாக இயக்குனார், ஸ்டார் நலக்காப்பீடு அவர்கள் அனைவருக்குமான நலக்காப்பீட்டின் மூலம் உயர்ந்து வரும் வாழ்க்கை முறை நோய்களின் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்வதைக் குறித்து எடுத்துரைத்தார். மரு. பி. தங்கராசு, சார் துணை வேந்தர் (மருத்துவம்), எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகம், அவர்கள் அடுத்த ஐந்தாண்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீயூ சௌத்வேல்ஸ் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவுடன் நீட்டிப்பு செய்து, வாழ்முறை நோய்களைப் பற்றிய கூட்டு ஆராய்ச்சி செய்யப்படும் எனக் சுறினார்.
வாழ்க்கை முறை நோய்களின் ஆராய்ச்சியில் முன்னோடியான மரு. ரிச்சர்டு டெய்லர், நீயூ சௌத்வேல்ஸ் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் சார்பாக வாழ்முறை நோயாளிகள் எங்கனம் உலகெங்கிலும் வேறுபடுகின்றது என்பதைப்பற்றி உரையாற்றினார்.
சுமார் 250 மருத்துவர்கள் தென் இந்தியாவில் உள்ள 48 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்றார்கள். சுமார் 130 ஆராய்ச்சிக்கட்டுரைகள் வாசிக்கப்பெற்றன. எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரிவளாகத்தில் SRM மருத்துவக் கல்லூரி மாணவர்களால் பொது மக்களுக்காகவும், நோயாளிகளுக்காக, நலவாழ்வு கண்காட்சி வாழ்முறை நோய்களைத் தடுப்பது பற்றி நடத்தப்பட்டது.
மரு. அ. சுந்தரம், முதல்வர், எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வந்திருந்த மாநாட்டு பிரதிநிதிகளை வரவேற்றார் மரு. ம. லோகராஜ் அவர்கள் நன்றி உரையாற்றினார்.