சென்னை: தமிழக முன்னால் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கீரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள தென் பெண்ணை பங்களாவில் அவருக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தில் இருந்து அவரை காலி செய்யுமாறு பொதுப்பணி துறை வலியுறுத்தியது.
இந்நிலையில், இன்று போயஸ் கார்டன் பகுதியிலுள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு பின்புறம் இருக்கும் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள புது வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் குடியேறினார்.