புது டெல்லி:இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் மே, ஜூன் மாதங்களில் 5 வெளிநாடுகளுக்கு (இலங்கை, ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, கஜகஸ்தான்) செல்ல திட்டமிட்டுள்ளார்.
மே மாதம் 2-வது வாரம் இலங்கையில் புத்த மாநாடு நடக்கிறது. அதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிறகு அங்கு நுவரெலியாவில் இந்தியா நிதி உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
மே மாத இறுதியில் ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா ஆகிய நாடுகளுக்கு மோடி செல்வார். அந்த நாடுகளுடன் தொழில் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு உடன்பாடுகளில் பிரதமர் மோடி கையெழுத்திடுவார்.
ஜுன் 7, 8-ந்தேதிகளில் கஜகஸ்தான் செல்கிறார். அங்கு நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஷாங்காய் கூட்டு அமைப்பில் இந்தியாவை உறுப்பினர் ஆக்க உள்ளார்.