வாஷிங்டன்:அமெரிக்காவுக்கு சென்று பணியாற்ற வேண்டுமானால் அந்த நாட்டின் ஹெச் 1பி விசாவைப் பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த விசாவை அமெரிக்க தூதரகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி முதல் 6 மாதத்துக்கு தற்காலிகமாக ‘எச்.1பி’ விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்கா இன்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் நேற்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஆளும் குடியரசுக் கட்சியும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் இணைந்து இந்த மசோதா தாக்கல் செய்தன. இந்த மசோதா தாக்கல் மூலம் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகள் பாதுக்காக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்பு எச்.1பி விசா பெற்றவர்கள், தங்கள் மனைவி அல்லது கணவருக்கு மிக எளிதாக பணி விசா பெறும் நிலை இருந்தது. அந்த சிறப்பு சலுகை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது. இதனால் எச்.1பி விசா பெறுபவர்கள் மனைவி அல்லது கணவனுக்கு என்று விசா பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.