போபால்:உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதையொட்டி பைரைச்சில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உங்கள் திருமணம் எப்போது நடைபெறும், நாங்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம் என்று ராகுலிடம் கேட்டனர், அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி "அதற்கு அதிக நாட்கள் காத்திருக்க தேவையில்லை" என்று சிரித்துகொண்டே கூறியுள்ளார்.