ஜியோ நிறுவனம் மூலம் இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ள முகேஷ் அம்பானி, அடுத்த கட்டமாக 'கால் டாக்ஸி' சேவையிலும் கால் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய பெரு நகரங்களில் 'கால் டாக்ஸி' சேவை தொடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், 'கால் டாக்ஸி' சேவை வழங்கும் நிறுவனம் எதையும் தொடங்கும் எண்ணம் தற்போது இல்லை என முகேஷ் அம்பானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.