மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.
தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜெயலலிதா பிறந்தநாளில், 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை துவங்கியுள்ளோம். ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். அவர் விட்டு சென்ற பணிகளை தொடர்வேன்." என்றார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.