கோவை:தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
புதுக்கோட்டை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தில் விவசாயிகள் பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி வரும் 27-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். அப்போது நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை எடுத்துச் சொல்ல உள்ளேன்.
கோவை மாநகரப் பகுதியில் மோனோ ரயில் சேவை கொண்டு வரப்படும். கோவை அரசு மருத்துவமனை 300 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
இன்னும் 5 நாட்களுக்குள் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.